தெலுங்கு கதாநாயகர்களைப் பார்த்தாவது தமிழக கதாநாயகர்கள் திருந்த வேண்டுமென்கிறார் தயாரிப்பாளர் கே.ராஜன்
Share
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அது அந்த கதாநாயகன் படத்திற்கு கிடைத்த வெற்றி, அதுவே அந்த படம் தோல்வியடைந்தால் அது அந்த பட இயக்குனர் சரியாக வேலை செய்யவில்லை அதனால் அந்த படம் தோல்வி ஆகிவிட்டது என பலர் எளிதாக கூறிவிடுவதுண்டு. அதில், ஒரு சில நடிகர்களே படம் தோல்வியுற்றால், அந்த நஷ்டத்தில் தானும் பங்கு கொள்ளும் அளவுக்கு தனது சம்பளத்தை விட்டு கொடுத்து வருகின்றனர். தமிழில் ரஜினி அவ்வாறு செய்துள்ளார். மற்ற சில நடிகர்களும் செய்துள்ளனர்.
இது பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் கே.ராஜன் அண்மையில் ஒரு பொது மேடையில் பேசுகையில், தமிழ் நடிகர்களை மிகவும் தாக்கி பேசியுள்ளார். அதாவது, ‘ தெலுங்கில் அண்மையில் ராதே ஷியாம் எனும் பெரிய படம் வந்தது. படம் தோல்வியடைந்தது. உடனே நடிகர் பிரபாஸ், அந்த படத்தின் சம்பளத்தில் இருந்து 50 கோடியை விட்டுக்கொடுத்துள்ளார்.
அதே போல, நடிகர் ராம் சரண் தான் நடித்த புரூஸ்லீ திரைப்படத்தின் தோல்வி காரணமாக தனது சம்பளத்தில் இருந்து 15 கோடியை திருப்பு கொடுத்தாராம். இதே போல தமிழ் நடிகர்கள் செய்வதில்லை ‘ என சரமாரியாக குற்றம் சாட்டினார் தயரிப்பாளர் கே.ராஜன்.













