LOADING

Type to search

உலக அரசியல்

அமீரகத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்தில் இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்

Share

அமீரகத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்தில் இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜேராவில் உள்ள ஷேக் கலீபா பின் ஜாயித் சாலையில் லோரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோரி தறிகெட்டு ஓடி முன்னால் சென்று கொண்டு இருந்த காரின் மீது பலமாக மோதியது. அது முக்கிய நெடுஞ்சாலை என்பதால் பின்னால் அதிவேகமாக வந்த வாகனங்கள் முன்னால் நிகழ்ந்த விபத்தை அறிவதற்கு முன் அடுத்தடுத்து 23 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இதில் முதலில் மோதிய லோரியில் டீசல் டேங்க் பற்றி எரிந்ததில் மளமளவென பின்னால் மோதிய வாகனங்களுக்கும் அந்த தீ பரவியது. இந்த கோர விபத்தில் இந்தியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் முதற்கட்டமாக கேரளம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் பலியானது துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.