LOADING

Type to search

இலங்கை அரசியல்

தனது சேமிப்பு பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்க கையளித்த கீழக்கரை சிறுமி

Share

(மன்னார் நிருபர்)
(08-05-2022)


ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (7) கையளித்தார்.