இங்கிலாந்தின் இலண்டன் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய கனடா நண்பர்கள்
Share
அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்ற அனைத்துலக தமிழர்கள் மாநாட்டில் பங்கெடுக்கும் வகையில் இங்கிலாந்து சென்றிருந்த கனடா வாழ் நண்பர்களான கனேடியத் தமிழர் பேரவையின் தலைவரும்,ரொறன்ரோ தமிழ் இருக்கையின் தலைவருமான திரு சிவன் இளங்கோ. திருமதி பிரேமா இளங்கோ மற்றும் கனடாவின் வர்த்தகப் பிரமுகர் திரு சங்கர் நல்லதம்பி அவரது பாரியார் ஆகியோர். இங்கிலாந்தின் இலண்டன் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி மலர் மாலை அணிவிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்கள்.
கடந்த 4,ம் திகதி புதன்கிழமை லண்டன் SOAS பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்த அவர்கள் அனைவரும் இங்கிலாந்து தமிழ் இருக்கையின் முக்கிய உறுப்பினர்கள் சகிதம் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு காணப்படுகின்றன.
இலண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கனடா தமிழ் இருக்கை அமைவதற்கு முன்னோடியாக விளங்கிய திரு, சிவன் இளங்கோ அவர்களுடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து நிர்மலா ஞானசேகரன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து கௌரவித்தனர். லண்டன் தமிழ் இருக்கையின் முக்கிய செயற்பாட்டாளர் திருமதி சிவானந்தியும் படங்களில் காணப்படுகின்றார்.













