உலகின் மிகச்சிறந்த பாடசாலைகளுக்கான விருதில் முதல் 10 இடங்களில் 5 இந்திய பாடசாலைகள் தேர்வாகின
Share
உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்குவது இங்கிலாந்தில் உள்ள டிஜிட்டல் மீடியா தளமான டி4 கல்வி அமைப்பால் பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.
சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புதுமை, இன்னல்களை சமாளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும். பொது வாக்கெடுப்புக்கு பின் உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற தலைவர்களை கொண்ட நடுவர் குழு வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும்.
இந்த ஆண்டு அக்டோபரில் வரும் உலக கல்வி வாரத்தில் இந்த ஆண்டுக்கான சிறந்த பள்ளி போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பரிசுக்கான முதல் 10 இடங்களில் 5 இந்திய பாடசாசாலைகள் இடம்பெற்றுள்ளன. மும்பையை சேர்ந்த எஸ்விகேஎம்னின் சிஎன்எம் பள்ளி, டெல்லி லாஜ்பாட் நகரில் உள்ள எஸ்டிஎம்சி பாடசாலை ஆகியவை புதுமைக்கான பிரிவில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. மும்பை கோஜ் பாடசாலை, புனேவில் உள்ள பிசிஎம்சி ஆங்கில வழி பாடசாலை ஆகியவை சமூக ஒத்துழைப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் 10 பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளன. சிரமங்களை சமாளிப்பதற்கான உலகின் சிறந்த பாடசாலைகளுக்கான விருது பிரிவில் ஹவுராவில் உள்ள சமாரிட்டன் மிஷன் பாடசாலை இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.













