LOADING

Type to search

உலக அரசியல்

ஹார்மூஸ். 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து, சிதறினயென ஈரான் தெரிவித்துள்ளது

Share

 ஹார்மூஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கி 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து, சிதறின என ஈரான் கடற்படை தெரிவித்து உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்தது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில் இருதரப்பிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது. எனினும், ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை யார் நிர்வகிப்பது? என்பதில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போட்டி காணப்படுகிறது. இருவரும் இந்த பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. எங்களுடைய அனுமதியின்றி கப்பல்கள் செல்ல முடியாது என ஈரான் அறிவித்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்போ இந்த பகுதியை முழு அளவில் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம் என கூறினார். இந்த நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை வெளியிட்ட செய்தியில், ஈரான் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் ஹார்மூஸ் ஜலசந்தியில் 2 கப்பல்கள் செல்ல முயன்றன. எங்களுடைய ரேடார் மற்றும் பிற சாதனங்களை மீறி அவை சென்றன. இந்த அங்கீகாரம் இல்லாத பகுதி வழியே யாருக்கும் தெரியாமல் ரகசிய பயணம் மேற்கொண்டு செல்ல முயன்ற 2 எண்ணெய் கப்பல்கள் வழியிலேயே, கடல் கண்ணி வெடியில் சிக்கி, வெடித்து, தீப்பிடித்து எரிந்தன என தெரிவித்து உள்ளது.