LOADING

Type to search

இலங்கை அரசியல்

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் வைத்தியர் ஷாபியை வணங்குகிறார்கள்

Share

– முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

(15-06-2022)

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தான் பணியிடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமை க்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஷாபி மீதான உமிழப்பட்ட வெறுப்பிற்கு வைத்தியர் ஷாபி வழங்கியுள்ள பதிலிற்காக பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்திக்கும் திறன் உடைய அனைத்து சிங்கள பிரஜைகளும் வைத்தியர் ஷாபியை வணங்குகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.