LOADING

Type to search

கனடா அரசியல்

எதிர்வரும் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் நகரில் FIVE STAR HOTEL ஒன்றின் மண்டபத்தில் நடைபெறவுள்ள Miss Tamil Universe-2022

Share

மிகவும் அழகிய மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள சர்வதேச விழாவில் நாம் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்வோம்..

கனடாவில் வெற்றிகரமாக இயங்கிவரும் AGA Beauty Academy நிறுவனத்தின் ஆதரவில் எதிர்வரும் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் மார்க்கம் நகரில் HILTON HOTEL AND CONVENTION CENTRE மண்டபத்தில் நடைபெறவுள்ள Miss Tamil Universe-2022 உலகத் தமிழ் அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி மற்றும் அந்த விழா பற்றிய விபரங்களை ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கும் சந்திப்பு நேற்று மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

AGA Beauty Academy நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவியுமான சசிகலா நரேன் அவர்கள் அவரது கணவர் திரு நரேன் ஆகியோர் இந்த சந்திிப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ‘ Miss Tamil Universe-2022 உலகத் தமிழ் அழகிப் போட்டி விழாவில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து பத்துக்கு மேற்பட்ட போட்டியாளர்களும் மற்றும் கனடா இந்தியா ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலுமிருந்து சுமார் 20 இளம் பெண் போட்டியாளர்கள்; இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

For more information, please contact SISIKALA NAREN at 416 677 5511