LOADING

Type to search

கனடா அரசியல்

Ontario’s Provincial Minister Raymond Cho Team hosted ‘ Scarborough North Victory Celebration and Volunteer Appreciation Night’

Share

ஒன்றாரிியோ அமைச்சர் றேமண்ட் சோ தேர்தல் பிரச்சாரக் குழு ஏற்பாடு செய்த ‘வெற்றிக் கொண்டாட்டமும் தொண்டர்கள் கௌரவிப்பு நிகழ்வும்’

கனடாவின் நீண்ட கால அரசியல் அர்ப்பணிப்பாளரும், தொடர்ச்சியாக துர்தல் வெற்றிகளை தனதாக்கிக் கொண்டவரும் ஒன்றாரிியோ மாகாண அமைச்சருமான கௌரவ றேமண்ட் சோ தேர்தல் பிரச்சாரக் குழு ஏற்பாடு செய்த ‘வெற்றிக் கொண்டாட்டமும் தொண்டர்கள் கௌரவிப்பு நிகழ்வும்’ சிறப்பாக நடைபெற்றது

நேற்று மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தமிழ் பேசும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரான லோகன் கணபதி அவர்களும் அங்கு கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.

தமிழ்க் கலாச்சாரத்தின் கலை சார்ந்த அடையாளமான பரதநாட்டிய உருப்படி ஒன்றை சக்தி நர்த்தனாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளான செல்விகள் தியானா ரவிசங்கர் மற்றும் பவிஸ்னா ரட்ணசிங்கம் ஆகியோர் வழங்கி சபையோரை மகிழ்வித்தனர்.