LOADING

Type to search

இலங்கை அரசியல்

மாந்தை கிழக்கும் மற்றும் துணுக்காய் பிரதேச செயலக ஊழியர்கள் கவயீர்ப்பு போராட்டம்

Share

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அலுவலக தேவைக்கு வைக்கப்பட்டிருந்த எரிபொருளை புதுக்குடியிருப்பு பொலிஸார் எடுத்துச்சென்று பிரதேச செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமையை கண்டித்து துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கிலும் பிரதேச செயலக ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை நிர்வாக சேவை சங்கம் பிரதேச செயலகங்களில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலக ஊழியர்களும் இன்று சுமார் 2 மணி நெரம் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது அலுவலக பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது