LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் இருந்து மடு மாதா ஆலயம் நோக்கி பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்!

Share

மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா வரும் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல் பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கிய பக்தர்களின் நடைபயணம் இன்றைய தினம் பாண்டியன்குளம் நட்டன்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளது .

எதிர்வரும் 15 ஆம் திகித மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதாயாத்திரையாக செல்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,இரணைப்பாலை வற்றாப்பளை பகுதிகளில் இருந்து கட்டம் கட்டமாக மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்ய நடைபயணம் மேற்ற்கொண்டு வருகின்றார்கள்.

இதேவேளை யாழ்ப்பாணம் கரவெட்டி, துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்திலிருந்து நேற்று முன்தினம் நடைபயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் இன்று காலை நட்டாங்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளனர்

கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்திருந்த கொரோனா காரணமாக கடந்த ஆண்டு 13 ஆம் திகதிக்கு பின்னர் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் இவ்வருடம் அதிகளவான மக்கள் நேர்த்தி கடன்களை நிறைவுசெய்ய கட்டம் கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்த்தர்கள் முல்லைத்தீவு-மன்னார் எல்லை கிராம பாதையான பாண்டியன்குளம் , நட்டாங்கண்டல்,பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்கள்.

ஜெகதீஸ்வரன் டிஷாந்த்