LOADING

Type to search

கனடா அரசியல்

மலேசியத் திருநாட்டின் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்த கனடா சரவணபவன் சைவ உணவகங்களின் அதிபர் கணேசன் சுகுமார்..

Share

அண்மையில் கனடா ஹலிபக்ஸ் நகரில் நடைபெற்ற (Commonwealth Countries) பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவென மலேசியத் திருநாட்டிலிருந்து வருகை தந்திருந்த எகிரி மாநில சட்டபையின் துணை சபா நாயகர் திரு ரவி முனுசாமி. சட்டசபை உறுப்பினர் குணா குணசேகரன் மற்றும் பெண்கள் விவகாரங்கள் மற்றும் சிறுவர் நலத்துறை இராஜாங்க அமைச்சர் ஆகியோர் தற்போது ரொறன்ரோ மாநகருக்கு வருகை தந்துள்ளனர்.

கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் விருந்தினர்களாக தங்கியுள்ள இந்த மூன்று அரசியல் தலைவர்களும் இங்கு பல பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.

இந்த வரிசையில். எகிரி மாநில சட்டபையின் துணை சபா நாயகர் திரு ரவி முனுசாமி அவர்களையும் சட்டசபை உறுப்பினர் குணா குணசேகரன் அவர்களையும் தனது ஸ்காபுறோ உணவகக் கிளைக்கு அழைத்து விருந்தளித்து மகிழ்ந்தார் கனடா சரவணபவன் சைவ உணவகங்களின் அதிபர் கணேசன் சுகுமார் அவர்கள்..

இங்கே காணப்படும் படங்களில் கனடா சரவணபவன் சைவ உணவக ஸ்காபுறொ கிளையில் ‘துணை சபா நாயகர் திரு ரவி முனுசாமி சட்டசபை உறுப்பினர் குணா குணசேகரன் ஆகியோருடன் திருவாளர்கள் கணேசன் சுகுமார். முகாமையாளர் முஜாஹிட் ஜலால்.. உதயன் நிறுவனத்தின் நெருங்கிய நண்பர் பாஸ்டர் சோதி செல்லா சரவணபவன் உணவகத்தின் தலைமை சமையல் வல்லுனர் நாராயணசாமி ராமசாமி. உதயன் லோகேந்திரலிங்கம ஆகியோர் மகிழ்ச்சியுடன் நிற்பதையும் காணலாம்.

LJI Journalists Ganesh and Arjune