LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக காலி முகத்திடல் பகுதியில் ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Share

இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் காலி முகத்திடல் பகுதியில் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது வரை கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறும் வலியுறுத்தி இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வும் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்று வருகின்றது.