LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் வங்காலையை சேர்ந்த சிற்பி மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் சிலை

Share

(மன்னார் நிருபர்)

(19-09-2022)

மன்னார் வங்காலையை சேர்ந்த இலங்கையின் பிரபல ஓவியரும்,சிற்பியுமான யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பவரால் , மூன்றரை அடியில் குமார் சங்கக்காரவின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவின் சிலை குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த அழகிய சிலையை வடிவமைப்பு செய்து நேர்த்தியாக உருவாக்கியது இலங்கையின் பிரபல ஓவியரும், சிற்பியும் மன்னார் வங்காலையை சேர்ந்த கலைஞர் யோ.மெரின் ஜெரோமி மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்படுவதற்காக குமார் சங்கக்காரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதல் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் உட்பட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்ட போது, பல்கலைக்கழகத்தினுள் குமார் சங்ககாரவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. என எமது மன்னார்ச் செய்தியாளர் அறிவித்துள்ளார்