LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மறைமாவட்ட பம்பைமடு இறையிரக்க ஆலயப் பங்கின் துணை ஆலயமான சிவபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழா

Share

(19-09-2022)

வவுனியா சிவபுரம் புனித யாகப்பர் ஆலயம் மீண்டும் புதிய கட்டுமான பணிகளோடும், திருத்தங்களோடு, புதிதாக வடிவமைக்கப்பட்டு திருவிழா ஆயத்தங்களும் முன்னெடுக்கப்பட்டு ஆலயம் மீண்டும் அர்ச்சிப்பு செய்யப்பட்டது, இவ்வாலயத்தை எமது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்நாயகம் அடிகளார் அர்ச்சித்து திறந்து வைத்தார்.

அர்ச்சிப்பு விழாவோடு வழிபாடுகள் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியினை பங்குத்தந்தை அருட்பணி ஜெகநாதன் அடிகளாரினால் ஆசிர்வதித்து ஏற்றிவைக்கப்பட்டபின் 6:00 மணியளவில் நற்கருணை ஆராதனை வழிபாடு நடைபெற்றது.

நற்கருணை ஆராதனை வழிபாட்டினை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய உதவிப் பங்குத்தந்தை அருட்பணி கிளின்ரன் அடிகளார் நிறைவேற்றினார்.

 

நிறைவில் ஆலய வளாகத்தினுள் நற்கருணை பவனி நடைபெற்று நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.

திருவிழாத் திருப்பலியானது 18-09-2022 ஞாயிற்றுகிழமை காலை 7:30 மணியளவில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது

திருப்பலியினை எமது மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி P.கிறிஸ்நாயகம் அடிகளார் தலைமை தாங்கி நிறைவேற்றினார்