LOADING

Type to search

இலங்கை அரசியல்

வீட்டார் மரணச்சடங்குக்கு சென்றிருந்த வேளை கதவுடைத்து நகைகள் திருட்டு!

Share

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 06 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வீட்டார் மரணச்சடங்கு ஒன்றுக்கு சென்று விட்டு , வீடு திரும்பிய வேளை வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

வீட்டினுள் சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி காணப்பட்டதுடன் , வீட்டில் வைத்திருந்த 06 பவுண் நகை திருட்டு போய்யுள்ளமையை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.