LOADING

Type to search

உலக அரசியல்

தனது பிரதமர் அலுவலகத்தில் நுழைவதற்கு முன் இந்து பாரம்பரிய முறைப்படி வாசலில் விளக்கேற்றிய ரிஷி சுனக்

Share

இங்கிலாந்தின் புதிய பிரதமர் ரிஷி சுனக் தனது பிரதமர் அலுவலகத்தில் நுழைவதற்கு முன் இந்து பாரம்பரிய முறைப்படி வாசலில் விளக்கேற்றியதாக காட்சி வீடியொ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிரபல ஊடகங்கள் உட்பட பலராலும் பகிரப்படும் இந்த வீடியோ குறித்த உண்மையான தகவல் தற்போது பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது முன்னாள் லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததையடுத்து, பேராதரவுடன் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்றார்.

அன்று உலக மக்கள் இந்த பதவியேற்பை கொண்டாடி மகிழ்ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கட்கு புகழாரம் சூட்டிய விவகாரம் பிரதமர் மோடியையுமு; அவரது ஆதரவாளர்களையும் குறிப்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகக் கும்பலையும் கோபத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது எனினும் தனது பதவியின் மூலம் பிரித்தானியாவில் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளியினர் என்ற பெருமையை ரிஷி பெற்றுள்ளார். மேலும், ஒரு வெள்ளையர் அல்லாத முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக், இலக்கம் 10, டவுனிங் தெரு என்னும் விலாசத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன், வாசலில் இந்து பாரம்பரிய முறைப்படி பொட்டு வைத்து, விளக்கேற்றி வழிபட்டதாக காணப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.

42 வயதான பிரதமர் ரிஷி சுனக் பெருமையுடன் பூஜைகளை செய்து தனது இந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். இதனால் அவருக்கு உலக இந்து மக்கள் மத்தியில் நன் மதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோ குறிப்பாக ஆப்பிரிக்காவில் வைரலாகியுள்ளது, பல செய்தி நிறுவனங்கள் மற்றும் ஊடக பிரபலங்கள் இதைப் பகிர்ந்துள்ளனர். ட்விட்டரில் 800,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட நைஜீரியாவின் மிகப்பெரிய பத்திரிகைகளில் ஒன்றான PM News என்ற ஊடகம் கூட இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.