LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மறைசாட்சிகள் வரலாற்றை வெளிக்கொணர்ந்த ‘வித்துக்கள்’ திரைப்படம்

Share

மன்னார் நிருபர்-

(9-11-2022)

மன்னார் மறைசாட்சிகள் வரலாற்றை வெளிக்கொணர்ந்த ‘வித்துக்கள்’ திரைப்படம் மன்னார் (SUN) சன் திரையரங்கில் உத்தியோகபூர்வமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியீடு செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் கொழும்பு உயர் மறைமாவட்ட குருக்கள், அருட்பணி பிரசாத் , அருட்பணி அன்ரனி , திரைப்பட இயக்குநர், மன்னார் மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி அகஸ்ரின் புஸ்பராஜ், அருட்பணியாளர்கள் , திரைப்படத்தில் நடித்த மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த கலையருவி கலைஞர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு 200 மேற்பட்டவர்கள் இணைந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்வில் விருந்தினர் மாலையிட்டு வரவேற்க்கப்பட்டனர்.

காலம்சென்ற சங்கிலி அரச வேடத்தில் நடித்த தர்ஷன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்பு உரைகள் இடம்பெற்றது.

திரைப்பட குழுவினர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி கெளரவிக்கப்பட்டனர்.

இறுதியில் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.