LOADING

Type to search

இலங்கை அரசியல்

மாங்குளத்தில் இடம்பெற்ற போலீசார் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான சந்திப்பு

Share

ஜெகதீஸ்வரன் டிஷாந்த்

போலீசார் மற்றும் பொதுமக்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இந்ரு முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமுத்திர ஜீவ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இன்றைய தினம் குறித்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

குறிப்பாக மாவட்டத்தில் இடம்பெறும் பெண்கள் மீதான துஸ்பிரயோகங்கள் , பாடசாலை மாணவர்களின் கற்றல் இடைவிலகல் மற்றும் போதை வஸ்து பாவனையின் அதிகரிப்புக்களும் அதன் தாக்கங்களும் ,அதனூடு உருவாகும் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றியும் குறித்த கலந்துரையாடலில் மக்களால் கருத்துரைகளும் வைக்கப்பட்டிருந்தன

இதேவேளை மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றியும் பிரதேச போலீசார் அசண்டையீனமாக இருப்பதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபரிடம் மக்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது

மக்காளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் சம்பவங்கள் தொடர்பில் தான் கூடிய கவனம் எடுப்பதாகவும் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு வாரத்துக்குள் தன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

குறித்த கலந்துரையாடலில் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிகள் , பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள் ,பொலிஸ் குழு உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்