Sri Lanka Accountants Association in Canada hosted Annual Awards Gala
Share
கனடாவில் ‘இலங்கை கணக்காளர்கள் சங்கம்’ நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து
கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும் ‘இலங்கை கணக்காளர்கள் சங்கம்’ தனது வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் விருதுகள் வழங்கல் நிகழ்வை கடந்த 17ம் திகதி சனிக்கிழமையன்று மார்க்கம் நகரத்தில் அமைந்துள்ள Hilton Hotels மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.
தற்போதைய இயக்குனர் சபையினர் தலைவர் மயுரன் அவர்கள் தலைமையில் விழாவை நடத்த ஏற்பாடுகளைச் செயதிருந்தனர்.
பல வர்த்தக நண்பர்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற ஆதரவை வழங்கினார்கள். அவர்கள் அனைவரும் மேடையில் கௌரவிக்கப்பெற்றார்கள். உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு சமூகமளித்து தனது பாராட்டுக்களை நண்பர்களுக்குத் தெரிவித்தார்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.