இயக்குநராகும் நடிகை ராதிகா ஆப்தே
Share
காதாநயகிகளாக சினிமாத்துறைக்குள் வரும் கதாநாயகிகள் இயக்குநர் அவதாரம் எடுப்பது சகஜமாகி வருகிறது. அந்த வகையில் பல கதாநாயகிகள்படம் டைரக்டு செய்துக்கொண்டிருக்கின்றனர்.
ரேவதி, கங்கனா ரணாவத், நந்திதா தாஸ், ஹேமமாலினி, பூஜா பட் உள்ளிட்ட நடிகைகள் டைரக்டர்களாக மாறி உள்ளனர் நாம் அறிந்ததே. ஒரு காலத்தில் இயக்குனர் என்றால் ஆண்கள்தான் என்ற நினைப்புதான் நமக்கு இருக்கும். ஆனால் இப்போது பல பெண் இயக்குனர்கள் சினிமாவில் வலம் வருகின்றனர். அதே போல் படம் நடிக்கும் நடிகை, நடிகர்கள் இப்போது இயக்குனர்களாகவும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி, கார்த்தி ஜோடியாக ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்து இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ராதிகா ஆப்தேவும் படம் இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக நடிப்ப்பதை அவர் நிறுத்த போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், இயக்குனராக வேண்டும் என முதலில் இருந்தே எனக்கு ஆசை உள்ளது. ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். அது மட்டுமின்றி நான் ஏற்கனவே இயக்குனர் பிரிவில் பயிற்சியும் பெற்றிருக்கிறேன். விரைவில் ஒரு படத்தை இயக்க போகிறேன். என்றார். மேலும் அதற்கு முன்பு திரைக் கதை பற்றி இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக சில இயக்குனர்களிடம் பணியாற்றி பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறேன். திரைக்கதைகளைகூட தயார் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஆனாலும் நடிப்பில் இருந்து விலக மாட்டேன். நடிப்புக்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.










