LOADING

Type to search

சினிமா

வெளியானது வாரிசு ட்ரைலர் பக்காவான குடும்ப திரைப்படம் என்பதை நிரூபித்து விட்டது

Share

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பக்கா குடும்ப கதையம்சம் கொண்ட ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஜனவரி 12 அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த சில நாட்களாக டாக் ஆப் தி டவுன் ஆக இருந்து வந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது இன்னும் தளபதியின் ‘வாரிசு’ பட ட்ரைலர் வெளியாகவில்லையே என கவலைப்பட்டு கொண்டு இருந்த ரசிகர்களின் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்ற வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகிவிட்டது.

‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சொன்னபடியே இப்படம் குடும்ப செண்டிமெண்ட், ஆக்ஷன், காதல் மற்றும் நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக ஒரு பக்கா குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகி இருப்பது சில வினாடிகளுக்கு முன்னர் வெளியான வாரிசு பட ட்ரைலரின் மூலம் தெரிகிறது.

சரத்குமாரின் இளைய மகனாக விஜய் நடித்திருக்கிறார், சரத்குமார் பெரிய தொழிலதிபராக இருக்கிறார் சில காரணங்களால் விஜய் தனது தந்தையின் தொழிலை ஏற்று நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில் தனக்கு வில்லனாக வரும் பிரகாஷ் ராஜை எதிர்த்து ஜெயிக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, ஷாம், ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், மீனா, யோகி பாபு, பிரபு, சம்யுக்தா போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தமன் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.