LOADING

Type to search

உலக அரசியல்

நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸின் ஜாலியான டிக் டாக் வீடியோ

Share

கடந்த ஜனவரி 15ஆம் தேதி நேபாள நாட்டின் பொக்ரா விமான நிலையத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென தீபிடித்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.விபத்தில் 5 இந்திய பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிந்த உயிரிழந்த ஓஷின் அலே மாகரின் தந்தை மோகன் ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஆவார்.

நேபாளத்தில் உள்ள ஏர் ஹோஸ்டஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ஓஷின் கடந்த இரு ஆண்டுகளாக யேட்டி விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டசாக பணிபுரிந்து வந்துள்ளார். விபத்து நடந்த தினத்தில் ஓஷினை வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது தந்தை அறிவுறுத்தியுள்ளார். சங்கராந்தி பண்டிகை காலத்தில் வேலைக்கு ஏன் செல்கிறாய், வீட்டில் இருந்து பண்டிகையை கொண்டாடலாம் என ஓஷினிடம் அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.

The Air hostess in #YetiAirlinesCrash

Live life to the fullest as long as you are alive because death is unexpected!

Just sharing TikTok video of Air Hostess Oshin Magar who lost her life in #NepalPlaneCrash today

जहां भी रहो ऐसे ही रहो!
Rest in Peace !!💐#Nepal #planecrash pic.twitter.com/Bh6DBDnhnt

— Deep Ahlawat 🇮🇳🎭 (@DeepAhlawt) January 15, 2023
அதற்கு ஓஷின், இந்த ஒரு நாள் மட்டும் வேலையை முடித்து விட்டு வீட்டு வந்து பண்டிகையை கொண்டாடுகிறோன் என வாக்குறுதி தந்து சென்றுள்ளார். ஆனால், எனது மகள் கோர விபத்தில் உயிரிழந்து வாக்குறுதியை நிறைவேற்றமால் சென்றுவிட்டாள் என மோகன் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்

உயிரிழந்த ஏர் ஹோஸ்டாஸ் ஓஷின் ஒரு டிக் டாக் பிரபலமாவார். இவர் விமானத்தில் எடுத்த டிக் டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இது கடைசியை பணத்திற்கு முன்பு எடுத்த வீடியோவா அல்லது பழைய வீடியோ என்பது உறுதி செய்யப்படவில்லை.