LOADING

Type to search

ராசி பலன்

06.11.2026 வெள்ளி முதல் 12.11.2026 வியாழன் வரையும்

Share


ஶ்ரீ ஶ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் ஸ்தாபகர்
ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்

40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் அஞ்சல், செங்கல்பட்டு மாவட்டம் – 603204.

தொடர்புக்கு: WhatsApp +91 77889 94666

மேஷம் :

பணவரவு தேவையான அளவுக்கு இருக்கும். வீண் செலவுகளும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுப்பிடித்துச் செல்லவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். சில நேரங்களில் அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும், ஆதரவாகவே இருப்பார்கள். வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் மனதில் சிறு குழப்பம் ஏற்படக் கூடும். வாரப் பிற்பகுதியில் புகுந்தவீட்டு உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய உற்சாகம் பிறக்கும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். வேலையில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு வாய்ப்பு உண்டு. தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை. சொத்து வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. தலைவலி, உடல் சோர்வு வரலாம். கோபத்தை குறைத்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும்.

அதிர்ஷ்ட எண்: 9. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், வியாழன்.

ரிஷபம்:

சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து நட்பு பாராட்டுவார்கள். வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிப்பதால் சற்று சிரமமான வாரம் என்றே சொல்ல வேண்டும். ஆனால், பணவசதி திருப்தி தருவதாக இருக்கும் சேமிப்பு அதிகரிக்கும் வாரம். ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பெரிய லாபம். கூட்டு தொழில் நல்லா இருக்கும். புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். திருமண பேச்சு வெற்றி அடையும். காதல் விஷயத்தில் நல்ல முன்னேற்றம். உடல் நலம் சீராக இருக்கும். சரும பிரச்சனை, தொண்டை வலி வரலாம், கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 6. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை. அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, சனி

மிதுனம்:

பணவரவு இருந்தாலும் வீண்செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பணியின் காரணமாகப் பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும். கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமையின் காரணமாகச் சற்று சோர்வு ஏற்படக்கூடும் புத்திசாலித்தனம் வெளிப்படும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வேலையில் உங்கள் பேச்சுத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். உடல் நலத்தில் கவனம் தேவை. தலைவலி, தூக்கமின்மை வரலாம். தியானம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 5. அதிர்ஷ்ட நிறம்: பச்சை. அதிர்ஷ்ட நாள்: புதன், வெள்ளி.

கடகம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாகும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சகோதரர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாரப் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை குறையும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தாயின் ஆசி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வயிறு வலி, சளி வரலாம். உணவில் கவனம் தேவை. ஓய்வு எடுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 2. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம். அதிர்ஷ்ட நாள்: திங்கள், வியாழன்.

சிம்மம்:

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். கணவருடன் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. புகழ் கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் பெரிய பொறுப்பு கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு வாய்ப்பு. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு. லாபம் அதிகரிக்கும். அரசு வேலை முயற்சி வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். தந்தையின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை. உடல் நலம் சீராக இருக்கும். கண் எரிச்சல், தலைவலி வரலாம், கவனம் தேவை. கோபத்தை குறைக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 1. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, தங்க நிறம். அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு, செவ்வாய்.

கன்னி:

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் இருப்பதன் மூலம் பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப் படுத்தும். வாரப் பிற்பகுதியில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். புத்திசாலித்தனத்தால் வெற்றி கிடைக்கும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். கடன் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய பொறுப்பு கிடைக்கும். மேலதிகாரி பாராட்டுவார். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். சொத்து வாங்கும் யோகம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வயிறு உபாதை, தலைவலி வரலாம். உணவில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்ட எண்: 5. அதிர்ஷ்ட நிறம்: பச்சை. அதிர்ஷ்ட நாள்: புதன், வெள்ளி.

துலாம்:

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகள் ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பைத் தருவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடன் கருத்துவேறுபாடு கொண்டு விலகிச் சென்ற உறவினர்கள், வலிய வந்து உறவு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும். பணியின் காரணமாக சிலருக்கு தற்காலிகமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காககூடுதலாக உழைப்பீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். லாபம் கூடுதலாக இருக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். மனதில் மகிழ்ச்சி கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். புதிய வருமானம் வரும். வேலையில் பதவி உயர்வு வாய்ப்பு. மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்பு வரும். கூட்டு தொழில் லாபம் தரும். புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி அன்பு கூடும். காதல் விஷயத்தில் நல்ல முன்னேற்றம். திருமண பேச்சு வெற்றி அடையும். உடல் நலம் சீராக இருக்கும். சரும பிரச்சனை வரலாம், கவனம் தேவை. நல்ல தூக்கம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் பச்சை. அதிர்ஷ்ட நாள்: வெள்ளி, சனி.

விருச்சிகம்:

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிலருக்குக் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறிது அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்குப் பணியிடத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி  செய்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன் வாங்க நேரிடும். கணவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் தைரியம் கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பாராத பணம் வரும். கடன் குறையும்.வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி பாராட்டுவார். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். போட்டியில் வெற்றி. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். சொத்து விஷயத்தில் நல்ல முடிவு. உடல் நலத்தில் கவனம் தேவை. இரத்த அழுத்தம், கோபம் வரலாம். அமைதியாக இருங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 9. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு. அதிர்ஷ்ட நாள்: செவ்வாய், வியாழன்.

தனுசு:

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்படும். செலவுகளைச் சமாளிப்பதற்குத் தேவையான பணம் கிடைத்துவிடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின்
விஷயங்களில் தலையிடவேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலை பார்க்கும் பெண்களுக்கு வீட்டில் ஏற்பட்ட சிரமங்கள் நீங்கும். அதிர்ஷ்டம் கூடும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும்.வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு வாய்ப்பு. தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். வெளியூர் பயணம் லாபம் தரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். குருவின் ஆசி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி. உடல் நலம் சீராக இருக்கும். மூட்டு வலி, வயிறு உபாதை வரலாம், கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 3. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். அதிர்ஷ்ட நாள்: வியாழன், திங்கள்.

மகரம்:

வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது வாழ்க்கைத் துணையின் ஆலோசனை கேட்டுச்செய்வது நல்லது. வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரால் பாராட்டுப் பெறும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. குடும்பப் பொறுப்புகளை மற்றவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய வருமானம் வரும். வேலையில் பதவி உயர்வு வாய்ப்பு. மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டு.குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். பெரியவர்கள் ஆசி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. மூட்டு வலி, கால் வலி வரலாம். ஓய்வு எடுங்கள். நல்ல தூக்கம் தேவை.

அதிர்ஷ்ட எண்: 8. அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, நீலம். அதிர்ஷ்ட நாள்: சனி, செவ்வாய்.

கும்பம்:

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவிக் கிடையே ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். பிள்ளைகளால் திடீர் செலவுகள்  ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். புகுந்த வீட்டு உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். புதிய யோசனைகள் வெற்றி அடையும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பாராத பணம் வரும். கடன் குறையும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி பாராட்டுவார். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர் கிடைப்பார். லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். உடல் நலத்தில் கவனம் தேவை. தலைவலி, சளி வரலாம். நல்ல தூக்கம் தேவை. தண்ணீர் அதிகம் குடியுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 8. அதிர்ஷ்ட நிறம்: நீலம், கருப்பு. அதிர்ஷ்ட நாள்: சனி, புதன்.

மீனம்:

பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையால் உதவி உண்டு.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனைக்கு நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள் கனவு நனவாகும் வாரம். பண வரவு நல்லா இருக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்பு வரும். மேலதிகாரி ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம். குருவின் ஆசி கிடைக்கும். திருமண பேச்சு வெற்றி அடையும். உடல் நலத்தில் கவனம் தேவை. கால் வலி, தூக்கமின்மை வரலாம். தியானம்
செய்யுங்கள். ஓய்வு எடுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட நாள்: வியாழன், திங்கள்.