ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ
Share
அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் உருவாக்கம் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் இணைந்த போனி கபூர், எச்.வினோத், அஜித் கூட்டணி தொடர்ந்து 3ஆவது முறையாக இந்த படத்தில் இணைந்தது. அஜித்தின் வலிமை படத்திற்கு கலவை விமர்சனங்கள் வெளிவந்தன.
ஆனால் துணிவு படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவான விமர்சனங்கள் வெளிவந்து படமும் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றிருப்பதால் படக்குழுவினரும் அஜித் ரசிகர்ளும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த படத்துடைய மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. மேக்கிங் வீடியோவை பார்க்க…
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஜி.எம். சுந்தர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










