LOADING

Type to search

சினிமா

தனுஷின் 50-வது படத்தில் திருச்சிற்றம்பலம் பிரபலம்?

Share

இந்த மாத தொடக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 50வது படமான ‘D50’ படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தை தனுஷ் இயக்குவதாகவும் தெரிகிறது.

வெளியான தகவல்களின்படி, D50 படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனராம். ராயன் வடசென்னையை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, ‘திருச்சிற்றம்பலம்’ காம்போ இந்தப் படத்தில் மீண்டும் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயன் படத்தின் ஸ்கிரிப்டை தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் எழுதுகிறாராம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.