பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்
Share
1990-களில் டப்பிங் பணியை தொடங்கிய அவருக்கு அர்ஜுன் நடித்த ‘ஓகே ஒக்கடு’ படம் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா தவிர விக்ரம், அஜித் உள்ளிட்டோருக்கும் தெலுங்கில் குரல் கொடுத்திருக்கிறார் மூர்த்தி. மலையாளத்தில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களில் மோகன் லால் உள்ளிட்டோருக்கு டப்பிங் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாச மூர்த்தி. அதோடு கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
விக்ரமின் ‘அபரிசிடுடு’ படத்திற்குப் பிறகு மூர்த்தி தெலுங்கு திரையுலகில் பிரபலமடைந்தார். ஹீரோவுக்கு மூன்று வித்தியாசங்களில் டப்பிங் செய்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. ஆனால் அவர் அதை எளிதாக செய்தார். சூர்யாவின் ‘சிங்கம்’ படமும் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. அஜித்துக்காக ‘விஸ்வாசம்’ மற்றும் சமீபமாக வெளியான மற்ற படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார். மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ அவரது கடைசி கால படங்களில் ஒன்றாகும்.
குணச்சித்திர கலைஞர்களுக்காகவும் மூர்த்தியை அணுகினர் படக்குழுவினர். அந்த வகையில் ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட படங்களில் ஜெயராமுக்கு குரல் கொடுத்தார். மூர்த்தியின் தந்தை ஏவிஎன் மூர்த்தி பின்னணிப் பாடகராக இருந்தார். இதற்கிடையே ஸ்ரீநிவாச மூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
This is a huge personal loss! Srinivasamurthy Garu’s voice & emotions gave life to my performances in Telugu. Will miss you Dear Sir! Gone too soon.
— Suriya Sivakumar (@Suriya_offl) January 27, 2023
இது குறித்த ட்விட்டர் பதிவில், “இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு! ஸ்ரீனிவாசமூர்த்தியின் குரல் மற்றும் உணர்வுகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் சார்! விரைவில் சென்று விட்டீர்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.










