LOADING

Type to search

அரசியல் சினிமா

நடிகர் விஜய்யை கலாய்த்த யோகி பாபு – வைரலாகும் வீடியோ

Share

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாகி 16 நாட்களைக் கடந்தும் குடும்ப பார்வையாளர்களின் ஆதரவால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் உலக அளவில் ரூ.275 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தப் படம் ரூ.300 கோடி வசூலை எட்டும் கூறப்படுகிறது.

தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. இதனால் மகிழ்ச்சியான விஜய், படக்குழுவினருக்கு சமீபத்தில் விருந்தளித்தார். சென்னையிலும், ஹைதராபாத்திலும் வாரிசு படத்தின் வெற்றியை விஜய் உட்பட படக்குழுவினர் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Cute Thalapathy making fun♥️😂🥺🫂 #Varisu #Thalapathy67 #ThalapathyVijay𓃵 @actorvijaypic.twitter.com/lpbvtXvjOa

— 🍓Strawberry Penneꨄ︎🥀 (@PenneStrawberry) January 28, 2023
இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்புத் தளத்தில் பேட்டரி கார் ஒன்றில் நடிகர் விஜய், யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் பேட்டரி கார் ஒன்றில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், ”ரோல்ஸ் ராய்ஸ்ல போலாமா அண்ணே” என்று விஜய்யிடம் கேட்கும் யோகிபாபு பின்னர் சுதாரித்துக்கொண்டு, ”வேணாம் நம்ம அமைதியா போய்டுவோம்” என்கிறார். அதனை கேட்ட விஜய் சிரிக்கிறார்.

மெர்சல், சர்கார், பீஸ்ட் படங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து யோகி பாபு இந்தப் படத்தில் நடித்துள்ளார். வாரிசு படத்தில் விஜய் – யோகி பாபுவுக்கு இடையேயான காமெடி காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.