LOADING

Type to search

சினிமா

சிம்புவின் அடுத்தப் படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

Share

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது ப்ரீ புரொடக்‌ஷனில் உள்ள நிலையில், ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்பு – தேசிங்கு பெரியசாமி இணையும் இப்படம் பீரியட் ஆக்‌ஷன் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். சிம்பு கடைசியாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார். அதோடு மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தனது ‘பத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகவும் அவர் காத்திருக்கிறார். முன்னதாக, ‘கொரோனா குமார்’ படத்தில் சிம்பு நடிப்பதாகக் கூறப்பட்டது, ஆனால் 6 மாதங்களுக்கும் மேலாக அப்படம் குறித்த எந்த தகவலும் இல்லை.

தேசிங்கு பெரியசாமியின் படத்தில் நடித்து முடித்ததும், சிம்பு மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணிபுரிவார் எனக் கூறப்படுகிறது.