மரண அறிவித்தல் | திருமதி. பவளம் பரஞ்சோதி
Share
யாழ்ப்பாணம், திருநெல்வெலியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பவளம் பரஞ்சோதி அவர்கள் ஏப்ரல் 1, 2023 அன்று கனடாவில் காலமானார்.
ஆன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டாக்டர். க. பரஞ்சோதியின் ஆருயிர் மனைவியும், நந்தகுமார் (கனடா), சகுந்தலா (அமெரிக்கா), செல்வகுமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, காலஞ்சென்ற அரசரத்தினம், தர்மபாலன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமுதினி (கனடா), அமிர்தலிங்கம் (அமெரிக்கா), வதனா (கனடா) ஆகியோரின் அன்பான மாமியாரும்,அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் அன்பான பாட்டியும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2023 சனிக்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும், 09-04-2022 ஞயிற்றுக்கிழமை காலை 9:00 மணி தொடக்கம் பி.ப 12:00 மணி வரையும் 384 Finley Ave., Ajax, ON L1S 2E3 இல் அமைந்துள்ள Ajax Crematorium and Visitation Centre இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் ஈமைக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
நந்தகுமார் (மகன்): (416) 892-7156
செல்வகுமார் (மகன்): (416) 264-1009
மறைந்த அன்னை பவளம் பரஞ்சோதி அவர்களுக்கு
கனடா மகளிர் மன்றத்தின் அஞ்சலிகள்
கடந்த 01-04-2023 அன்று எமை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ள திருமதி பவளம் பரஞ்சோதி அவர்கள் எமது மகளிர் மன்றத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவராக விளங்கியவர். அவரது இழப்பு எமது மன்றத்தின் நிர்வாகிகள். உறுப்பினர்கள் பயனாளிகள் அனைவருக்குமே மனங்களை உறைய வைத்த ஒரு சம்பவமாகவே ஆகிவிட்டது.
அன்னையின் பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது கனடா மகளிர் மன்றம் அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது
இங்ஙனம்
நிர்வாக சபை மற்றும் உறுப்பினர்கள்
கனடா மகளிர் மன்றம்
Canadian Women Council
Email: canadianwomencouncil@gmail.com
Website: https://www.canadianwomencouncil.com/
Phone No.: 647-505-4253
Address: 33 Almayo Crescent, Etobicoke, Toronto, ON, M9V 2L3.