கேப்டன் மில்லர் படத்தின் புதிய தகவல்
Share
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், மதுரையில் நடிகர் தனுஷ் உடற்பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.










