LOADING

Type to search

கனடா அரசியல்

Seniors’ Wellness Club presented Mothers Day and Fathers Day Celebrations together

Share

மார்க்கம் நகரில் இயங்கும் Seniors’ Wellness Club மூத்தோர் அமைப்பு நடத்திய அன்னையர் தின மற்றும் தந்தையர் தினக் கொண்டாட்டம்

மார்க்கம் நகரில் இயங்கிவரும் Seniors’ Wellness Club மூத்தோர் அமைப்பு நடத்திய அன்னையர் தின மற்றும் தந்தையர் தினக் கொண்டாட்டம் நேற்று மார்க்கம் நகரில் உள்ள மவுண்ட் ஜோய் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவி திருமதி செல்வா அருள்ராஜசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் பல மூத்தோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் டாக்டர் போல் ஜோசப். அறிஞர் சாமி அப்பாத்துரை மற்றும் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் ஆகியோர் உட்பட மேலும் சிலர் உரையாற்றினார்கள்.
கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

தலைவி செல்வா அருள் தனது உரையில் நெருக்கடியான நேரத்தில் கூட தமது அமைப்பு தடையின்றி இயங்கிட உதவிகள் வழங்கிய அனைவருக்கும் குறிப்பாக Seniors’ Wellness Club மூத்தோர் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு இவ்வாறான கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஆதரவாக விளங்கும் அன்பர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.