LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் கோடரியால் வெட்டி மகளை கொன்ற தந்தை சிறையில் தற்கொலை முயற்சி ‘மகள் உள்பட 3 பேரை கொல்ல திட்டமிட்டிருந்த தகவல்’ விசாரணையில் அம்பலம்

Share

கேரளாவில் 6 வயது மட்டுமே ஆன சொந்த மகளை வாலிபர் கோடரியால் வெட்டிக்கொன்று, தனது தாயையும், அதே கோடரியால் காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வாரிபர் மகேஷிடம் போலீசார் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. மகள் நக்ஷத்ரா தவிர அவருடைய தாய் சுனந்தா, திருமணத்தில் இருந்து பின்வாங்கிய பெண் போலீஸ் ஆகிய 3 பேரையும் கொல்ல திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

முதலில் மனநல பாதிப்பு காரணமாக மகளை மகேஷ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆனால், விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களை தொடர்ந்து திட்டமிட்டு தான் கொலையை செய்து உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே சிறையில் வைத்து பிளேடால் கழுத்தையும் கை நரம்பையும் அறுத்து தற்கொலைக்கும் முயன்ற மகேஷுக்கு ஆபத்தான நிலையில் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட மகேசின் மனைவி வித்யாவின் தம்பி விஷ்ணு கூறியது:

மகேஷ் அடிக்கடி எனது அக்காவை அடித்து கொடுமைப் படுத்துவார். மனரீதியாகவும் அவர் துன்புறுத்தி வந்தார். இதனால் தான் வித்யா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி நான் போலீஸிடம் புகார் செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.