கேரளாவில் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய நடன ஆசிரியருக்கு 40 ஆண்டு கடுங்காவல்
Share
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள கிளிசேரி பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ்(40). தனது வீட்டில் நடன பயிற்சி பள்ளி நடத்தி வந்தார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் நடனம் பயின்று வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது மாணவியை மிரட்டி 2 முறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் அந்த மாணவி கர்ப்பிணி ஆனார். மஞ்சேரி அரசு மருத்துவமனையில் அவருக்கு குழந்தையும் பிறந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கொண்டோட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மஞ்சேரி அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அஷ்ரப், நடன ஆசிரியர் மோகன்தாசுக்கு 40 வருடம்
கடுங்காவல் சிறையும் ரூ. 4 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொடுக்க வேண்டும் என்றும், அபராதம் கட்டாவிட்டால் மேலும் 2 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி அஷ்ரப் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












