அரபிக்கடலில் உருவான புயல் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்றது; 15ம் தேதி குஜராத் கடற்கரையை தாக்க வாய்ப்பு
Share
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் தீவிர புயலாக வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயல் மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியது. இன்று (ஜூன்11) காலை 9 மணி நிலவரப்படி இந்த புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தெற்கு தென்மேற்கில் 480 கிமீ தொலைவிலும், நாலியாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 610 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
தற்போது புயல் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் மேலும் நகர்ந்து வரும் 15ம் தேதி பிற்பகல் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பாஜக எம்எல்ஏயின் கோமாளித்தனம்
குஜராத் பாஜக எம்எல்ஏ ப்ரத்யுமான்சிங் ஜடேஜா. கடற்கரையில் அமர்ந்து பூஜை செய்கிறாராம். எதற்கு என்று கேட்டால், “புயலை அமைதிப்படுத்த” என்கிறார்.













