படப்பிடிப்பை முடித்த இந்தியன்- 2 படக்குழு
Share
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளதாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா காட்சிகள் நிறைவு செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூரத்தில் நடைபெற்று வந்த ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













