LOADING

Type to search

சினிமா

சூரி படத்தால் சூர்யாவிற்கு வந்த சிக்கல்?

Share

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். ஆனால், வெற்றிமாறன், சூரி நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தில் கவனம் செலுத்தி வந்ததால் சூர்யா கங்குவா படத்தில் நடிக்கத் தொடங்கினார். ‘விடுதலை’ படப்பிடிப்பு முடிந்ததும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘விடுதலை’ இரண்டாம் பாகம் பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளதால் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.