ஜிவி பிரகாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கள்வன் படக்குழு
Share
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த ‘பேச்சுலர்’, ‘ஐங்கரன்’, ‘ஜெயில்’ போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ‘கள்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் ஜிவி பிராகாஷின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய பதாகையை வெளியிட்டுள்ளது.













