LOADING

Type to search

இந்திய அரசியல்

பெங்களூருவில் விபத்து சபரிமலை பன்மொழி அறிவிப்பாளர் பலி

Share

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. நடை திறந்திருக்கும் நாளில் இந்த தகவல் மையத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பக்தர்களுக்கு தேவைப்படும் விபரங்கள் அறிவிப்பு செய்யப்படும்.

இது பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு உதவியாக இருந்து வந்தது. பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(வயது 63) தான் இந்த 5 மொழிகளிலும் அறிவிப்பு செய்து வந்தார். கடந்த 25 வருடமாக சபரிமலையில் நடை

திறந்திருக்கும் நாட்களில் பணியில் இருந்து வந்தார். ஜூன் 12 மாலை பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டர் மீது ஒரு கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீனிவாஸ் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.