LOADING

Type to search

சினிமா

மீண்டும் கமல்ஹாசனுடன் இணையும் விஜய் சேதுபதி

Share

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. . இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் ‘கேஎச்234’ படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கவுள்ளதாகவும் இப்படத்தின் கதையில் சில திருத்தங்கள் இருப்பதால் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.