விஜய் பட தயாரிப்பாளருடன் இணைந்த விஜய் தேவரகொண்டா
Share
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 13-வது படத்தை ‘கீதா கோவிந்தம்’ படத்தை இயக்கிய பரசுராம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளார். ‘விடி 13’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில், ‘விடி 13’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.













