LOADING

Type to search

சினிமா

சுப்ரமணியபுரம் மறு வெளியீடுக்கு கூட்டம் அதிகமாக இருக்கு.. ஜெய் நெகிழ்ச்சி

Share

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்கு சசிகுமார், சமுத்திரக்கனி, நடிகர் ஜெய், கஞ்சா கருப்பு ஆகியோர் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெய், “எல்லாருக்கும் மிக்க நன்றி. முதல் நாள் முதல் காட்சியை விட மறு வெளியீடுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. இத்தனை வருடத்திற்கு பிறகு இந்த படத்தின் மீது இவ்வளவு மரியாதை இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. சசிகுமாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்று அவர் இல்லையென்றால் நான் இல்லை” என்று பேசினார்.