LOADING

Type to search

இந்திய அரசியல்

நெல்லையில் தக்காளி விலை கிலோ 40 ரூபாயாக சரிந்தது

Share

மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் விலை 40 ரூபாயாக (கிலோ) குறைந்துள்ளது.

வடமாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக தக்காளியின் வரத்து முற்றிலுமாக குறைந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வந்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து குறைவால் விலை எகிறியது. கிலோ ரூ.130 முதல் 150 வரை சென்றது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குளாகினர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது, இதன் காரணமாக தக்காளியின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய விலையாக 1கிலோ மொத்த விற்பனையில் ரூ. 40 க்கும், சில்லரை விற்பனையில் ரூ.50க்கும் விற்பனையானது.

நேற்று 600 டன் வந்த நிலையில் இன்று 100 டன் அதிகரித்து 700 டன் ஆக வரத்து இருந்தது.

தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில். மேலும் அதிரடியாக விலை குறையும் வாய்ப்பு உள்ளது. இதர அனைத்து அத்தியாவசிய காய்கறிகளும் சுமார் 6,500 டன் அளவு உள்ளதாக, கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் நல சங்க தலைவர் எஸ் எஸ் முத்துக்குமார் தகவல் தெரிவித்தார்.

நெல்லையில் 140 ரூபாய் வரை உயர்ந்த நாட்டுத் தக்காளி விலை இன்று டவுன் போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டில் கிலோ ரூ.40 ஆக சரிந்தது. எனவே இங்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் வாங்கிச்சென்றனர்.

ரூ.180 வரை உச்சம் தொட்ட சின்ன வெங்காயமும் படிப்படியாக விலை சரிந்து தற்போது ரூ.70 ஆக குறைந்துள்ளது.

இஞ்சி (ரூ.250), பூண்டு (ரூ.180) மட்டும் தொடர்ந்து விலை குறையாமல் உச்சத்தில் உள்ளது.