LOADING

Type to search

சினிமா

‘நீண்ட நாள் ஆசை நிறைவேறும்’ – ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்

Share

சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், திரைத்துறையில் கால் பதித்து 30 ஆண்டுகள் கடந்ததையொட்டி, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் அருகே தனியார் இடத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு, ரசிகர்களும் வரத் தொடங்கிய நிலையில், திடீரென பெய்த மழையால் மைதானத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது.

இதனையடுத்து, ரசிகர்களின் நலன் கருதி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து கீச்சகத்தில் வருத்தம் தெரிவித்த ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான ஆறுதல் கூறினார். அதில், அரசின் ஒத்துழைப்புடன் சென்னையில் சர்வதேச தரத்தில் இசை நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று நம்புவதாக பதிவிட்டார். இந்நிலையில் ரஹ்மானின் கருத்து பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் என்று குறிப்பிட்டுள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமைய உள்ளதாக மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.