LOADING

Type to search

சினிமா

3 நாட்களில் ரூ200 கோடி வசூலை கடந்த ’ஜெயிலர்’

Share

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஜெயிலர்’ படம், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறிப்பாக, ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியது. இதைத் தொடர்ந்து இப்படம், உலகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியீடு ஆன ’ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில், இதர மொழி நடிகர் பட்டாளமும் நடித்திருப்பதால் கூடுதலாக வசூலையும் அள்ளி வருகிறது.

மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கர்நாடக நடிகர் ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருப்பதால், தமிழ்நாட்டைத் தாண்டியும் இப்படம், பிற மாநிலங்களிலும் வசூலைக் குவித்து வருகிறது. குறிப்பாக, பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்த ’ஜெயிலர்’, இரண்டாம் நாளில் ரூ.150 கோடி வசூலைக் கடந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜெயிலர் திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. ’ஜெயிலர்’ படம் வெளியான மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி கிளப்பில் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.