LOADING

Type to search

இந்திய அரசியல்

பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்

Share

திடீர் உடலநலக்குறைவு காரணமாக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஆக 13) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று காலை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை சீராக இருந்தநிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது காரில் சாலை மார்க்கமாக பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார்.

முன்னதாக அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கையை தனியார் மருத்துவமனை வெளியிட்டது. அதில், வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அவருக்கு வலி நிவாரணிகள் மற்றும் திரவங்கள் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.