LOADING

Type to search

இந்திய அரசியல்

முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று மணிப்பூர் வீரர்கள் தமிழ்நாடு வந்தனர்

Share

மணிப்பூரில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையால், அம்மாநில விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற சாதகமற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். முதலமைச்சரின் அழைப்பை ஏற்று மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள், 2 பயிற்சியாளர்கள் தமிழ்நாடு வர விருப்பம் தெரிவித்தனர். அதன்பேரில், மணிப்பூர் வீரர் – வீராங்கனையரை விமானத்தில் சென்னை அழைத்து வருவதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்ளவுள்ள மணிப்பூர் வீரர் – வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.