LOADING

Type to search

இந்திய அரசியல் கனடா அரசியல்

கனடா உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு சென்னையில் ‘இதழியல் செம்மல்’ என்னும் விருது வழங்கப்பெற்றது.

Share

தமிழ்நாட்டின் சென்னை மாநகரிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ ‘இலக்கியச் சஞ்சிகையின் 51ம் ஆண்டு விழா விருதுகளில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு ‘இதழியல் செம்மல்’ என்னும் விருது 18-05- 2023 அன்று வழங்கப்பெற்றது. ஆனால் அதைப் பெற்றுக் கொள்ளும் முகமாக அவரால் சென்னைக்குச் செல்ல இயலவில்லை.

எனவே மேற்படி விருதினை மாண்புமிகு நீதியரசரும் சிறந்த பேச்சாளருமான திரு இரா. சுரேஷ் குமார் 15-08-2023 அன்று மாலை நடைபெற்ற ஒரு சிறிய வைபவத்தில் அவரது உத்தியோகபூர்வமான வாசல்ஸ்தலத்தில் வைத்து வழங்கினார்.

படங்களில் ‘கவிதை உறவு’ ‘இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் ‘கலைமாமணி’ ஏர்வாடி இராதாகிருஸ்ணன் அவர்கள் உட்பட கலை இலக்கிய நண்பர்கள் மத்தியில் நீதியரசர் திரு இரா. சுரேஷ் குமார் அவர்கள் விருதினை வழங்குவதைக் காணலாம்.

செய்தியும் படங்களும்- சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்