LOADING

Type to search

இந்திய அரசியல் கனடா அரசியல்

சென்னை DWARAKA DOSS GOVERDHAN DOSS VAISHNAV COLLEGE கல்வி நிறுவன ஊடக கற்கைத் துறை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம்

Share

14-08-2023 அன்று திங்கட்கிழமை சென்னையில் DWARAKA DOSS GOVERDHAN DOSS VAISHNAV COLLEGE கல்வி நிறுவனத்தின் ஊடக கற்கையை துறை மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ‘கனடா உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றும் துறை சார்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் போதனாசிரியர் ஆகியோரோடும் கலந்துரையாடினார். இந்த கல்வி நிறுவனமானது சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

துறைத் தலைவர் திருமதி ஏ. பிரகதி உதயன் லோகேந்திரலிங்கம் அவர்களையும் அவரோடு இணைந்து சென்ற கவிஞர் வா.மு.சே. திருவள்ளுவர் அவர்களையும் வரவேற்றார். துறையின் இணைப்பாளரான திருமதி குணா கிறேசியல் அவர்கள் கலந்துரையாடலை பொறுப்பேற்று நடத்தினார்.

லோகேந்திரலிங்கம் அங்கு உரையாற்றும் போது ‘கனடாவில் பல்லினங்கள் சார்ந்த ஊடகங்கள் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்பதில் மத்திய மாகாண அரசாங்கங்கள் மிகவும் அக்கறை கொண்டவையாகவும் துணைநிற்பவையாகவும் உள்ளன. அவற்றின் ஆசிர்வாதமும் பல்லின ஊடகங்களுக்கு உண்டு. எனவே தான் எம்மால் தொடர்ச்சியாக எம் மொழி சார்ந்த இனம் சார்ந்த பத்திரிகைகளை நடத்தக் கூடியதாக உள்ளது.” என்றார்.