LOADING

Type to search

இந்திய அரசியல்

தொடர் விடுமுறையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ராமேஸ்வரம்

Share

தொடர் விடுமுறையால் ராமேஸ்வரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள். ராமநாதபுரம் மாவட்டமானது முக்கிய புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலானது 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாகவும். காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகும் உள்ளது. ராமேஸ்வரம் முக்கிய புண்ணிய ஸ்தலமாக உள்ளதால் வார விடுமுறை, சுதந்திர தினம், ஆடி அமாவாசை தொடர்ச்சியாக வந்ததால் ராமநாதசுவாமி கோவில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை முறையான வாகன நிறுத்துமிடத்தில் முக்கிய சாலையில் ஓரத்திலும், குறுகிய சாலை பகுதிகளிலும் நிறுத்தினர். குறிப்பாக அக்னி தீர்த்தம் கடற்கரையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை, மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் பலகை வைத்தும் அப்பகுதியிலை தங்களது வாகனங்களை நிறுத்தி கோவிலுக்கு செல்கின்றனர் சுற்றுலா பயணிகள். மேலும், அரசு நகர பேருந்தது நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பேருந்து இயக்க முடியாமலும், பேருந்து நிறுத்தம் இடத்தில் பேருந்தினை நிறுத்த முடியாமல் பேருந்து ஓட்டுநர்கள் அவதி அடைகின்றனர்.

தொடர் விடுமுறையாலும், தமிழக முதல்வரின் மீனவ மாநாடு காரணமாகவும் தங்கும் விடுதிகள் அனைத்தும் முழுமையானதால் தங்க இடங்கள் இன்றி பக்தர்கள் தவித்து வருகின்றனர். அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால் அனைவரும் தங்குமிடம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் என்று பொதுமக்கள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, போதிய காவல்துறையினரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியில் பணியில் அமர்த்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்கவும், அனுமதி இன்றி வாகனங்கள் நிறுத்துவதடுப்படுவதை தவிர்க்கவும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.